Breaking News

வால்பாறையில் மாணவிகளுக்கு பாலியல் சீண்டல் செய்த பேராசிரியர் உட்பட நால்வர் கைது

வால்பாறையில் மாணவிகளுக்கு பாலியல் சீண்டல் செய்த பேராசிரியர் உட்பட நால்வர் கைது செய்யப்பட்டனர்.
வால்பாறை அரசு கல்லூரியில்  இரண்டு நாட்களுக்கு முன்பு ஒருங்கிணைந்த சேவை மையம் சார்பில் பெண் குழந்தைகள் பாதுகாப்பு தொலைபேசி எண் 181 சம்பந்தமாக கல்லூரி மாணவிகளுக்கு விழிப்புணர்வு  நடத்தப்பட்டது.
இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அரசு கலைக்கல்லூரி மாணவிகள் சிலர் ஆசிரியர்கள் தங்களுக்கு பாலியல் சீண்டல் செய்ததாகவும் கல்லூரியில் படிக்கும் மாணவிகளுக்கு whatsapp மூலம் இரவு நேரத்தில் அடிக்கடி குறுஞ்செய்திகளும் ஆபாச புகைப்படங்களையும் அனுப்பி வருவதாகவும், வகுப்பறையில் மிக நெருக்கமாக நின்று பாடம் எடுப்பதாகவும் போன்ற பாலியல் சீண்டல்களில் ஈடுபடுவதாகவும் மாணவிகள் ஒருங்கிணைந்த சேவை மைய பணியாளர்களிடம் புகார்களை தெரிவித்துள்ளனர்.
இதன் அடிப்படையில் பெண்கள் பாதுகாப்பு ஒருங்கிணைந்த சேவை மையப் பணியாளர்கள் வால்பாறை உட்கோட்ட அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தனர்.
இந்த புகாரின் அடிப்படையில் வால்பாறை துணை காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநிதி தலைமையில் நான்கு தனிப்படைகள் அமைக்கப்பட்டு பாலியல் சீண்டல் விடுத்த சதீஷ்குமார்(39) தற்காலிக உதவி பேராசிரியர், அன்பரசு (37) லேப் டெக்னீசியன், முரளிராஜ் (33) தற்காலிக உதவி பேராசிரியர், மற்றும் ராஜபாண்டி தற்காலிக உதவி பேராசிரியர் ஆகிய நான்கு கல்லூரி ஆசிரியர்களை கைது செய்து  பெண் வன்கொடுமை உள்ளிட்ட இரண்டு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து கல்லூரி ஆசிரியர்களிடம் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments