Breaking News

நகராட்சி 4வது வார்டு பூங்காவில் மூங்கில் மரங்கள் வெட்டப்பட்டதாக புகார்

பொள்ளாச்சி நகராட்சிக்கு உட்பட்ட நான்காவது வார்டு சொர்ணபுஷ்பம் காலனி பகுதியில் 2013 ஆம் ஆண்டில் ரூ. 50 லட்சம் மதிப்பீட்டில் அம்மா விருது பூங்கா அமைக்கப்பட்டது.
 இந்த பூங்காவில் அழகிற்காக மூங்கில் மரங்கள் நட்டி வளர்க்கப்பட்டிருந்தது. 10 ஆண்டுகளுக்கும் மேலாக வளர்ந்திருந்த நூற்றுக்கணக்கான மூங்கில் மரங்களை இரண்டு நாட்களுக்கு முன்பு அனுமதியில்லாமல் வெட்டி அகற்றியதாக பொதுமக்கள் புகார் எழுந்துள்ளது. 
பொள்ளாச்சி நகராட்சி ஆணையர் கூறும் போது.... 
 மூங்கில் மரங்கள் வெட்டப்பட்டது குறித்து எனக்கு தகவல் தெரிவிக்கவில்லை. அது குறித்து விசாரணை நடத்தப்படும் என்றார்.

No comments