வயநாடு மக்களுக்காக நிதி திரட்டும் பொள்ளாச்சி மூன்றாம் வகுப்பு மாணவி
வயநாடு மக்களுக்காக நிதி திரட்டும் பொள்ளாச்சி மூன்றாம் வகுப்பு மாணவி 
கேரள மாநிலம் வயநாடு பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தனர். பள்ளிகள், வீடுகள், வழிபாட்டுத் தளங்கள் என முற்றிலும் சேதம் அடைந்தது.
கேரள வயநாடு மக்களுக்காக பல்வேறு தரப்பினரும் உதவி செய்து வருகின்றனர்.
இந்நிலையில் மற்றவர்களுக்கு முன்மாதிரியாக பொள்ளாச்சியை சேர்ந்த ராஜ்கபூர் என்பவரின் மூன்றாம் வகுப்பு படித்து வரும் மகள் சாய்னா நிதி திரட்டி வருகிறார்.
வீடு வீடாக சென்று நிதி திரட்டி வருகிறார். இதுவரை, பத்தாயிரம் ரூபாய் நிதி திரட்டி உள்ளதாக தெரிவித்துள்ளார். ஏற்கனவே பொள்ளாச்சி பகுதியில் இருந்து மூன்று லட்சம் மதிப்பிலான உதவிகள் வயநாட்டிற்கு அனுப்பப்பட்டுள்ளன. அதற்கான ஏற்பாடுகளை ராஜ்கபூர், சதாம் உசேன், குபேந்திரன், சந்தானகிருஷ்ணன் ஆகியோர் செய்திருந்தனர்.
No comments