Breaking News

வடுகபாளையம் ரயில்வே கேட் திறப்பு

வடுகபாளையம் ரயில்வே கேட் திறப்பு 

பொள்ளாச்சி நகராட்சியின் ஒன்றாவது வார்டு பகுதியாக இருப்பது வடுகபாளையம்.

 இங்கு செல்வதற்கு ரயில்வே இருப்புப் பாதையை கடந்து செல்ல வேண்டி உள்ளது. 

 சமீபத்தில் வடுகபாளையம் செல்லும் ரயில்வே கேட் பகுதியை ரயில்வே நிர்வாகம் மூடியது.

 இதனால், பள்ளி மற்றும் கல்லூரி செல்பவர்கள் வேலைக்கு செல்பவர்கள் என அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டனர்.

 இதை அடுத்து ரயில்வே கேட்டை மீண்டும் திறக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை எழுந்தது.

 பொதுமக்கள் கோரிக்கையை அடுத்து பொள்ளாச்சி எம்பி ஈஸ்வர சாமி ரயில்வே அமைச்சரை சந்தித்து கோரிக்கை வைத்தார்.

 அதேபோல் எம்எல்ஏ பொள்ளாச்சி வி. ஜெயராமன், அதிமுக நகர செயலாளர் கிருஷ்ணகுமார் உள்ளிட்ட அதிமுகவினர் பொதுமக்களுடன் சென்று கோவை மாவட்ட ஆட்சியரை சந்தித்து ரயில்வே கேட்டை திறக்க கோரிக்கை வைத்தனர்.

 இந்நிலையில், இரண்டு நாட்களுக்கு முன்பு மீண்டும் ரயில்வே கேட் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

 அறிவிப்பை அடுத்த திங்கள் கிழமை காலை வடுகபாளையம் ரயில்வே கேட் திறக்கப்பட்டது.

 ரயில்வே கேட் திறப்பு நடைபெற்ற போது, அங்கு திமுக நகர செயலாளர் நவநீதகிருஷ்ணன், நிர்வாகிகள் தர்மராஜ் உள்ளிட்ட பல இருந்தனர்.

No comments