Breaking News

கோவை தெற்கு மாவட்டத்தில் கலைஞர் நினைவு தினம்

கோவை தெற்கு மாவட்டத்தில் கலைஞர் நினைவு தினம்

 பொள்ளாச்சி 
பொள்ளாச்சியில் காந்தி சிலை அருகில் திமுக கோவை தெற்கு மாவட்ட செயலாளர் தளபதி முருகேசன் தலைமையில்
 கலைஞர் ஆறாம் ஆண்டு நினைவு தினத்தை நிகழ்ச்சி நடைபெற்றது. கலைஞர் கருணாநிதி உருவப்படத்திற்கு முன்னாள் அமைச்சர் மு.கண்ணப்பன், மாநிலதகவல் தொழில்நுட்ப அணி இணை செயலாளர் டாக்டர் மகேந்திரன், மாநில விவசாய அணி துணை தலைவர் தமிழ்மணி, கழக செயல்திட்ட குழு உறுப்பினர் தென்றல் செல்வராஜ், நகர செயலாளர் நவநீதகிருஷ்ணன், நகர மன்ற தலைவர் சியாமளா, வழக்கறிஞர் அதிபதி உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

அம்பராம்பாளையம்

இதேபோல் வால்பாறை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அம்பராம்பாளையம் சுங்கம் பகுதியில் ஒன்றிய செயலாளர் யுவராஜ் தலைமையில் திரண்ட ஏராளமான திமுக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள்  கலைஞர் உருவப் படத்திற்கு மரியாதை செய்தனர்.

 ஆனைமலை 
ஆனைமலை பேரூராட்சி முக்கோணம் பகுதியில் கலைஞர் உருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். இந்நிகழ்வில் ஆனைமலை பேரூராட்சி மன்ற தலைவர் கலைச்செல்வி சாந்தலிங்க்குமார், 
நகர தலைவர் சிங்காரம் சீனிவாசன், 
ஒன்றிய பொறுப்பாளர் ஈஸ்வரமூர்த்தி, 
ஆனைமலை பேரூராட்சி மன்ற துணைத் தலைவர்  ஜாபர் அலி வார்டு உறுப்பினர்கள் செயலாளர்கள் மற்றும் கழகத் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

வால்பாறை 
 வால்பாறையில் கலைஞர் 6 வது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு வால்பாறை நகர கழக திமுக சார்பில், வால்பாறை நகர கழக செயலாளர் குட்டி என்கிற ஆ.சுதாகர் தலைமையில் கலைஞர்  உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

 நிகழ்வில் நகர மன்ற தலைவர் அழகு சுந்தரவல்லி செல்வம், துணைத் தலைவர் செந்தில்குமார், நகர கழக நிர்வாகிகள், மாவட்டக் கழக நிர்வாகிகள், மாவட்ட அணி நிர்வாகிகள், நகர அணி நிர்வாகிகள், நகர மன்ற உறுப்பினர்கள், வார்டு கழக செயலாளர், மற்றும் பிரதிநிதிகள், மற்றும் கழகத் தோழர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

No comments