Breaking News

முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலையை திறந்து வைத்த தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின்

முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலையை திறந்து வைத்த தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் 
கருமத்தம்பட்டி அருகே கணியூரில் முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலையை தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் திறந்து வைத்தார். ஊஞ்சபாளையம் பிரிவில் முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலை மற்றும் நூலகத்தை தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். இதில் அமைச்சர்கள் சு.முத்துசாமி, எ.வ வேலு, பொன்முடி மாவட்ட செயலாளர்கள் தளபதி முருகேசன் தொ. அ ரவி, பொள்ளாச்சி பாராளுமன்ற உறுப்பினர் கே.ஈஸ்வரசாமி, முன்னாள் அமைச்சர்கள் பொங்கலூர்  பழனிச்சாமி, கண்ணப்பன், வடக்கு ஒன்றிய செயலாளர் ஏ.வி அன்பரசு, கருமத்தம்பட்டி நகராட்சி  தலைவர் நித்யா ஜி.மனோகரன், மாவட்ட அறங்காவல் குழு உறுப்பினர் சிபி செந்தில்குமார், கணியூர் ஊராட்சி தலைவர் வேலுச்சாமி, தெற்கு ஒன்றிய செயலாளர் மன்னவன், வடக்கு மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர் அம்பாள் எஸ்.ஏ நந்தகுமார், அன்னூர் தெற்கு ஒன்றிய செயலாளர் மு.தனபாலன், சாமளாபுரம் பேரூராட்சி தலைவர் விநாயகா பழனிச்சாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

No comments