Breaking News

வால்பாறையில் காலை உணவு திட்டத்திற்காக சென்ற வாகனங்களுக்கு வாடகை பாக்கி

வால்பாறையில் காலை உணவு திட்டத்திற்கு உணவு கொண்டு சென்ற வாகனங்களுக்கு உள்ள வாடகை பாக்கியை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு தமிழக முதல்வருக்கு வால்பாறை டூரிஸ்ட் கார் ஓட்டுநர் உரிமையாளர் சங்கம் சார்பில் கோரிக்கை மனு அனுப்பப்பட்டுள்ளது.
 மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது....
 காலை உணவு திட்டத்திற்கு வால்பாறை நகரத்திலிருந்து எஸ்டேட் பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு உணவு எடுத்துச் எடுத்துச் செல்ல தினசரி 1100 வாடகை நிர்ணயித்து நகராட்சி அதிகாரிகள் முன்னிலையில் ஒப்பந்தம் செய்யப்பட்டது.
 2023 ஆம் ஆண்டில் இயக்கப்பட்ட வாகனங்களுக்கு நகராட்சி சார்பில் வாடகை வழங்கப்பட்டது.
 ஆனால், 2024 ஜனவரியில் இருந்து ஜூன் மாதம் வரை உணவு கொண்டு சென்ற 8 வாகனங்களுக்கு வாடகை பாக்கி உள்ளது.
 இது குறித்து நகராட்சி அதிகாரிகள் மற்றும் ஆணையாளரிடம் கேட்டால் பணம் இல்லை என்றும் பணம் இருக்கும்போது தருகிறோம் என்று கூறி காலம் தாழ்த்தி வருகின்றனர். இதனால், காலை உணவு திட்டத்திற்காக வாகனங்களை இயக்கியவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. ஆகவே வாடகை தொகை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு முதல்வருக்கு அனுப்பிய மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments