Breaking News

பி ஏ பி கால்வாயில் தண்ணீர் திருடினால் மின் இணைப்பு துண்டிக்கப்படும் சார் ஆட்சியர் எச்சரிக்கை


பி ஏ பி கால்வாயில் தண்ணீர் திருடினால் மின் இணைப்பு துண்டிக்கப்படும் 

சார் ஆட்சியர் எச்சரிக்கை 
திருமூர்த்தி அணையிலிருந்து இரண்டாம் மண்டல பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட உள்ளது. இந்நிலையில், பொள்ளாச்சி சார்- ஆட்சியர் கேத்தரின் சரண்யா தலைமையில் திட்ட குழு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் சார் -ஆட்சியரின் நேர்முக உதவியாளர் அரசகுமார், வட்டாட்சியர்கள், நீர் பாசன துறை அதிகாரிகள், காவல்துறையினர் மற்றும்  மின்துறையினர் பங்கேற்றனர்.
பிஏபி கால்வாயில் தண்ணீர் திருடினால் மின் இணைப்பு துண்டிக்க சார் -ஆட்சியர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். அதேபோல் கடைமடை வரை தண்ணீர் செல்வதை உறுதிப்படுத்த வேண்டும் என்பதையும் அறிவுறுத்தினார். தண்ணீர் திருட்டில் ஈடுபடுபவர்கள் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்யவும், வருவாய்த்துறை, நீர்ப்பாசன துறை, மின் வாரியம், காவல்துறை இணைந்து குழு அமைத்து தண்ணீர் திருட்டை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.

No comments