Breaking News

மூப்பனார் பிறந்தநாள் விழா

 G.K.மூப்பனார் பிறந்த நாள் ஆகஸ்ட்-19 
தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் விவசாயிகள் தினமாக கொண்டாடப்பட்டது.
கோவை புறநகர் தெற்கு மாவட்டம் பொள்ளாச்சியில் நடைபெற்ற பிறந்தநாள் விழாவில் 
மாவட்டத் தலைவர் P.குணசேகரன் 
மூப்பனார் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து, கொடியேற்றி,  பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கினார்.
  நகரத் தலைவர் சுப்பராயன் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் கன்னிமுத்து, சாமியப்பன், லோகநாதன், கேபிள் சுப்பிரமணியம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
  வட்டாரத் தலைவர்கள் கிருஷ்ணசாமி, தாவளம் ஜெகதீஷ், ரங்கநாதன், மணிகண்டன், பரணிதரன், இரும்புகடை சண்முகம், விஷ்வா, ஸ்ரீதர், வேணுகோபால், மீசை கோவிந்தன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
 நிகழ்ச்சி ஏற்பாடுகளை முன்னாள் நகர இளைஞரணி  நிர்வாகிகள்
 கல்யாண்குமார் மற்றும் மணிகண்டபிரபு செய்திருந்தனர்.

No comments