Breaking News

நானும் ரவுடிதான்... சினிமா காமெடி போல் அரங்கேறிய கொலை

நானும் ரவுடிதான் 

சினிமா காமெடி போல் அரங்கேறிய கொலை 

 பெயிண்டிங் தொழிலாளி வெட்டிக்கொலை 

இளைஞர் கைது
பொள்ளாச்சி அடுத்த அம்பராம்பாளையம் சுங்கம் பகுதியில் ரோட்டில் நடந்து சென்ற  பெயிண்டர் ஒருவரை பலரிடம் அடி வாங்கிய குடிபோதை ஆசாமி வெட்டி கொலை செய்த சம்பவம் நடைபெற்றுள்ளது.

    அம்பராம்பாளையம் சுங்கத்தில் உள்ள பேக்கரியில் திங்கள்கிழமை இரவு அதே பகுதியை சேர்ந்த பசுபதி(26) டீ குடிக்க வந்தவர்களிடம் மது போதையில் தகராறு செய்துள்ளார். 

அப்போது டீ குடிக்க வந்த நபர்கள் பசுபதியை அங்கிருந்து வெளியேற்றியுள்ளனர். இதில் கைகலப்பு நடைபெற்றதாகவும் கூறப்படுகிறது. பின்பு வீட்டுக்குச் சென்ற பசுபதி மீண்டும்  கையில் அரிவாளுடன் வந்து தகராறு செய்துள்ளார். ஆனால், பசுபதியுடன் கைகலப்பு செய்தவர்கள் அங்கு இல்லை.

 இந்நிலையில், பெயிண்டிங் வேலைக்குச் சென்று விட்டு சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த பேக்கரியில் நடந்த பிரச்சனைக்கு சம்பந்தமில்லாத கிருஷ்ணன் (40) என்பவரை மது போதையில் பின்னந் தலையில் வெட்டியுள்ளார்.

 பலத்த காயமடைந்து கிருஷ்ணன் சம்பவ இடத்திலேயே இறந்து விட்டார். இது தொடர்பாக ஆனைமலை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து பசுபதி மை கைது செய்தனர். 

பெயிண்டிங் வேலை செய்துவிட்டு வீட்டிற்கு திரும்பி கொண்டு இருந்த ஏதும் அறியாத அப்பாவியை தான் ஒரு ரவுடி என்ற தோரணையில் வெட்டிக்கொலை செய்துள்ளார்.

No comments