Breaking News

என்னங்க சார் உங்க சட்டம் ?பெண்ணின் கேள்விக்கு பதில் கூற முடியாமல் பொள்ளாச்சி சார் பதிவாளர் திணறல்


என்னங்க சார் உங்க சட்டம் ?

பெண்ணின் கேள்விக்கு பதில் கூற முடியாமல் பொள்ளாச்சி சார் பதிவாளர் திணறல்

மனைவிக்கு தெரியாமல் சொத்தை விற்றதாக கூறி பொள்ளாச்சி சார்பதிவாளர் அலுவலகத்தில் குழந்தைகளுடன் பெண் தர்ணாவில் ஈடுபட்டத்துடன் சார் பதிவாளர் இடம் சரமாரி கேள்வி கேட்டதால் பதில் கூற முடியாமல் சார் பதிவாளர் திணரும் நிலை ஏற்பட்டது.


பொள்ளாச்சி ஆர். பொன்னாபுரத்தில் வசித்து வருபவர்கள் சத்யவாணி - சுரேஷ் தம்பதியினர்.

 இவர்களுக்கு இரு மகன்கள் உள்ளனர். சமீப காலமாக இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு இருந்ததாக கூறப்படுகிறது. 

இவர்கள் வசிக்கும் வீட்டை விற்க கணவன் சுரேஷ் முயற்சி செய்து வந்ததை அறிந்த மனைவி சத்தியவாணி சார் பதிவாளர் அலுவலகத்தில் சொத்தை விற்க தடங்கல் மனுவை கடந்த ஒன்பதாம் தேதி வழங்கியதாக கூறப்படுகிறது. 

 ஆனால், சார்பதிவாளர் அந்த மனுவை விசாரிக்காமல் சுரேஷிற்கு சாதகமாக கடந்த 12ஆம் தேதி வேறு ஒரு நபருக்கு சொத்தை கிரையம் செய்து கொடுத்ததாக தெரிகிறது.

இதை அறிந்த மனைவி சத்தியவாணி தனது இரு குழந்தைகளுடன் பொள்ளாச்சி சார்- பதிவாளர் அலுவலகத்தில் புதன்கிழமை தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். 

போராட்டத்தில் ஈடுபட்ட சத்தியவாணி என்னங்க சார் உங்க சட்டம்... நான் மனு கொடுத்து இருந்தும் ஏன் என்னை விசாரிக்காமல் சொத்தை கிரயம் செய்து கொடுத்தீர்கள் ? லஞ்சம் வாங்கிவிட்டு இதுபோன்று செய்து விட்டீர்களா ? உங்கள் சட்டத்தில் நீதிப்படி நடக்க மாட்டீர்களா ? இதற்குத்தான் படித்துவிட்டு வந்து இந்தப் பணியில் அமர்ந்தீர்களா ? என சரமாரியாக கேள்வி எழுப்பினார்.

 அந்த பெண்ணின் கேள்விக்கு சார்பதிவாளர் பதில் கூற முடியாமல் திணறினார்.

தகவல் அறிந்த போலீசார் வந்து  மாவட்ட பதிவாளர் இடம் புகார்  தெரிவித்தால் நடவடிக்கை எடுப்பார்கள் என சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.

No comments