Breaking News

ஆனைமலையில் புனித வெள்ளி நிகழ்ச்சி


ஆனைமலையில் புனித வெள்ளி நிகழ்ச்சி
புனித வெள்ளிக்கிழமையை முன்னிட்டு பொள்ளாச்சி மெயின் ரோடு ஆனைமலை பாரதி நகரில் உள்ள புனித ஆரோக்கிய அன்னை தேவாலயத்தில் ஆலய பங்குத்தந்தை
ஆரோக்கியதாஸ் தலைமையில் சிலுவைப்பாதை மற்றும் சிறப்பு பிரார்த்தனை ஆராதனை வழிபாடு நிகழச்சிகளை நடத்தினார்.

இதில் ஏராளமான ஆண்கள் பெண்கள் இந்த ஆராதனை வழிபாட்டில் கலந்து கொண்டனர். 

இயேசு கிறிஸ்து நாதர் புனித வெள்ளிகிழமையன்று இறந்த நாளாக கருதி துக்கம் அனுசரிக்கப்பட்டு அன்றைய நாள் முழுவதும் சிறப்பு பிரார்த்தனைகள் ஆலயத்தில் நடைபெற்றது. 

முடிவில் அனைவருக்கும் புனித கஞ்சி வழங்கப்பட்டது

இதனையடுத்து சனிக்கிழமை இரவு இயேசுகிறிஸ்து நாதர் மரித்து மூன்றாம்நாள் உயிர்த்தெழுதல் பெருவிழாவை கொண்டாடும் வகையில் இன்று நள்ளிரவு சிறப்பு திருப்பலி கூட்டுப் பிரார்த்தனை, ஆராதனை வழிபாடுகளும்  நடைபெறும். 

அன்றைய தினம் ஈஸ்டர் திருப்பலியின் போது புதிய பாஸ்கா திரி ,புது நெருப்பு ,புது தீர்த்தம் மந்திரிக்கப்படும்.

இன்றுடன் கிறிஸ்தவர்கள் 40 நாட்கள் கடைப்பிடித்து வந்த
விரதத்தை முடித்துக் கொள்கின்றனர்.


No comments