Breaking News

ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணை கமிஷன் என்ன ஆனது- கனிமொழி எம்பி மக்கள் மத்தியில் கேள்வி

ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணை கமிஷன் என்ன ஆனது

கனிமொழி எம்பி மக்கள் மத்தியில் கேள்வி

பொள்ளாச்சி, பிப்.10
 
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணை கமிஷன் என்ன ஆனது என கனிமொழி எம்பி மக்கள் மத்தியில் கேள்வி எழுப்பியுள்ளார்.

 பொள்ளாச்சி அடுத்த திப்பம்பட்டியில் கனிமொழி எம்பி புதன்கிழமை மாலை பிரச்சாரம் செய்தார்.
 
 கனிமொழி எம்பி பேசியது....
 

கடந்த 10 ஆண்டுகளாக அதிமுக ஆட்சி நடைபெற்றும் மக்கள் எந்த பயனும் அடையவில்லை. வேளாண் சட்டங்கள் போன்றவற்றால் விவசாயிகள் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு அடகு வைக்கப்படுகின்றனர். 
 
வேலை இல்லா திண்டாட்டம் நிலவுகிறது. புதிய தொழிற்சாலைகள் கொண்டுவரப்படவில்லை. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் உள்ளதாக ஓபிஎஸ் தெரிவித்தார்.
 
 அவரது மரணம் குறித்து விசாரிக்க விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டது. ஆனால், அந்த கமிஷன் என்ன ஆனது என தெரியவில்லை. சசிகலாதான் எடப்பாடி பழனிச்சாமியை முதல்வராக்கினார். ஆனால், எடப்பாடி பழனிச்சாமி சசிகலாவையே விமர்சனம் செய்கிறார். துரோகத்தால் உருவான ஆட்சிதான் தற்போது நடைபெறுகிறது.
 

 பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட மூன்றுபேருமே அதிமுகவை சேர்ந்தவர்கள்தான். இந்த வழக்கில் தொடர்புடைய பலரை அதிமுக அரசு காப்பாற்ற நினைக்கிறது. திமுக ஆட்சிக்கு வந்தால்தான் பெண்களுக்கு பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும். 

பெண்களுக்கு என தனி நீதிமன்றங்கள் அமைக்கப்படும். தேங்காய்க்கு ஆதார விலை நிர்ணயிக்க நடவடிக்கை எடுக்கப்படும். பொள்ளாச்சி சுற்றுப்பகுதியில் தேங்காய் எண்ணெய் ஆலைகள் அமைக்கப்படும். என்றார்.

 

No comments