Breaking News

நாளை மாசாணியம்மன் கோயில் குண்டம் இறங்கும் விழாவிற்காக குண்டம் கட்டும் பணி

நாளை மாசாணியம்மன் கோயில் குண்டம் இறங்கும் விழாவிற்காக குண்டம் கட்டும் பணி



பொள்ளாச்சி, பிப்.26
 ஆனைமலை மாசாணியம்மன் கோயில் குண்டம் இறங்கும் விழா நாளை காலை 7.30 மணிக்கு நடைபெற உள்ளதால் இன்று குண்டம் கட்டுதல் பணியில் முறை தாரர்கள் ஈடுபட்டனர்.

 கோவை மாவட்டம், ஆனைமலை மாசாணியம்மன் கோயில் மிகவும் பிரசித்திபெற்றது. மாசாணியம்மன் கோயிலுக்கு உள்ளூர் மட்டுமின்றி வெளியூர்களில் இருந்தும் பக்தர்கள் தரிசனத்திற்காக வந்துசெல்வார்கள். வெள்ளி, சனி, ஞாயிறு மற்றும் விஷேச நாட்களில் பக்தர்கள் கூட்டம் அதிக அளவில் இருக்கும்.

 ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் குண்டம் விழா விமர்சையாக நடைபெறும். தை அமாவாசையில் கொடியேற்றத்துடன் துவங்கும். இந்த ஆண்டு கடந்த 11ம் தேதி தை அமாவாசையில் குண்டம் விழா கொடியேற்றத்துடன் துவங்கியது. 24ம் புதன்கிழமை நள்ளிரவு மயானபூஜை நடைபெற்றது. 25ம் தேதி சக்தி கும்பஸ்தாபனம், மகாபூஜை நடைபெற்றது.

 இன்று குண்டம் கட்டுதலும், மாலை 6 மணிக்கு சித்திரை தேர் வடம் பிடித்தலும், இரவு குண்டம் பூ வளர்த்தலும் நடைபெறவுள்ளது.  27ம் தேதி காலை 7.30 மணிக்கு குண்டம் இறங்குதல் துவங்கவுள்ளது. 
குண்டம் இறங்குதல் நிகழ்ச்சியை பார்க்க லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என்பதால், பாதுகாப்பிற்காக டிஎஸ்பி விவேகானந்தன் தலைமையில் 250க்கும் அதிகமான போலீஸார் பணியில் ஈடுபடவுள்ளனர். மருத்துவர் குழு, தீயணைப்புதுறையினர், குடிநீர், கழிப்பிட வசதி போன்றவையும் ஏற்படுத்தப்படவுள்ளது.

No comments