உடுமலை அருகே காயங்களுடன் உயிரிழந்து கிடந்த யானை
ஆனைமலை புலிகள் காப்பகத்தில் புலி, சிறுத்தை, யானை, ராஜநாகம் மற்றும் பல்வேறு உயிரினங்கள் உள்ளன.
இந்நிலையில் உடுமலை அருகே ஈசல் தட்டு பகுதியில் ஆண் யானை ஒன்று சனிக்கிழமை காயங்களுடன் உயிரிழந்து கிடைப்பதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதை அடுத்து, வனத்துறையினர் சம்பவ இடத்தில் ஆய்வு செய்து வருகின்றனர். தொடர்ந்து விசாரணையிலும் ஈடுபட்டுள்ளனர்.
No comments