Breaking News

பொள்ளாச்சி-உடுமலை சாலை 6 வழியாக சாலை தரம் உயர்த்தப்படும். எம்பி ஈஸ்வரசாமி தகவல்



 பொள்ளாச்சி-உடுமலை தேசிய நெடுஞ்சாலையில் மரப்பேட்டை முதல் ஊஞ்சவேலாம்பட்டி வரை 6 வழி சாலையாக மாற்றப்படும் என எம்பி ஈஸ்வரசாமி தெரிவித்துள்ளார்.
  பொள்ளாச்சி-உடுமலை சாலையில் மரப்பேட்டையில் இருந்து ஊஞ்சவேலாம்பட்டி வரை 4 வழிச்சாலையாகவும், இருபுறமும் சர்வீஸ் சாலைகளும் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால், இந்த சர்வீஸ் சாலைகள் போதிய அகலம் இல்லாததால் வாகனங்கள் செல்லமுடியாத நிலை உள்ளது.
சர்வீஸ் சாலையையும், நான்கு வழிச்சாலையையும் பிரிக்கும் வகையில் தடுப்பு கம்பிகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த சாலையில், அதிகமாக கல்விக்கூடங்களும், தொழிற்சாலைகளும் அமைந்துள்ளதால் விபத்துக்ககள் அடிக்கடி ஏற்படுவதாக புகார் எழுந்துவருகிறது. இந்நிலையில், எம்பி  ஈஸ்வரசாமி இந்த சாலையில் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்தார். உடன்  சார்-ஆட்சியர் கேத்திரன் சரண்யா, திமுக நகரச்செயலாளர் நவநீதகிருஷ்ணன் உட்பட பலர் இருந்தனர்.
ஆய்விற்கு பிறகு எம்பி ஈஸ்வரசாமி கூறுகையில்...மரப்பேட்டையில் இருந்து ஊஞ்சவேலாம்பட்டி வரை சர்வீஸ் சாலையில் உள்ள தடுப்பு கம்பிகள் அப்புறப்படுத்தப்பட்டு ஆறு வழிச்சாலையாக விரைவில் தரம் உயர்த்தப்படும் என்றார்.

No comments