Breaking News

ஆடிப்பூரம் திருவிழாவை முன்னிட்டு உடுமலை குறிஞ்சேரி பூமி லட்சுமி ஆண்டாள் நாச்சியார் கோவில் லட்சார்ச்சனை



 ஆடிப்பூரம் திருவிழாவை முன்னிட்டு
உடுமலை குறிஞ்சேரி பூமி லட்சுமி ஆண்டாள் நாச்சியார் கோவில் லட்சார்ச்சனை
  உடுமலை அருகே குறுஞ்சேரியில் ஆடி பூரத்தை முன்னிட்டு பூமி லக்ஷ்மி ஆண்டாள் நாச்சியார் கோவிலில் மழை வேண்டியும் லட்சார்ச்சனை நிகழ்ச்சி நடைபெற்றது. 

  பலவகை மலர்களுடன் ஹேமா  மந்திரங்கள் கூறி லட்சார்ச்சனை செய்யபட்டது.  அலங்கரிக்கப்பட்ட பூமி லட்சுமி ஆண்டாள் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

 முதல் நாள் லட்சார்ச்சனை, உபசாரம், சாற்றுமுறை நிறைவு பெற்ற பின் அம்மனுக்கு சிறப்பு மலர் அபிஷேகம் மற்றும் சிறப்பு தீபாரதணை நடைபெற்றது.

 இந்த நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

 முக்கிய நிகழ்வாக வருகின்ற 7ம் தேதி புதன்கிழமை
 ஸ்ரீ ரங்க மன்னார் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் திருக்கல்யாண 
வைபவம் நடை
பெற உள்ளது. 

No comments